அவசர மருத்துவ உதவி வேண்டி கோரிக்கை!!

3411 0


அதிரை எக்ஸ்பிரஸ்:-    அன்றி, நன்மைக்கும் (அல்லாஹ்வுடைய) இறை அச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள் (அல் குர்ஆன் 5:2)

இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படைந்துள்ள சகோதரர் மன்சூர் அவர்களுக்கு உதவ வேண்டுகோள்

நமது மஹல்லாவைச் சேர்ந்த மல்லிகைப் பூ வீட்டு மஹபூபா அவர்களின் மகன் மன்சூர் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென உடல் சுகவீனம் அடைந்ததை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் அவரது 2 கிட்னிகளும் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து சிகிச்கைகள் மேற்கொள்வதற்காக கோவை மருத்துவ மனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார், மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவினங்கள் கடுமையாக வருவதால் அவற்றை சமாளிக்கும் பொருளாதார வசதிகள் ஏதுமின்றி இருப்பதால் முஹல்லாவாசிகள் உதவ வேண்டும் என நமது முஹல்லா ஜமாஅத்தின் ஒப்புதலோடு வேண்டுகோள் கடிதம் ஒன்றை நமக்கு (TIYA) அனுப்பியுள்ளார்.

மருத்துவ சிகிச்சைகளுக்காக கோவை மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்து வரும் மன்சூர் அவர்களால் அவருக்குத் தேவையான பொருளாதாரத்தை திரட்ட இயலாததால் நம்முடைய உதவியை பெரும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துள்ளார். மிக ஏழ்மை நிலையிலும் தொடர் மருத்துவ சிகிச்சையிலும் இருக்கும் மன்சூர் அவர்களுக்கு அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடியும், மனிதாபிமான அடிப்படையிலும் உதவிடுவது நம் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.

முஹல்லாவாசிகளிடமிருந்து TIYAவிடம் வைக்கப்படும் மருத்துவ கோரிக்கைகள் மீது அதிகபட்சம் 5,000 ரூபாய்கள் மட்டுமே நிர்வாக முடிவின் அடிப்படையில் வழங்க முடியும் என்பதால் உங்களுடைய உதவிகளை அவருடைய இருப்பிடத்திற்கே நேரில் சென்றோ அல்லது அமீரக TIYA நிர்வாகம் பரிந்துரை செய்துள்ள நிர்வாகிகள் மூலமாகவோ கொடுத்து தாராளமாக உதவிட வேண்டுகிறோம்.

சகோ. முஹமது மாலிக், 050 7914780 சகோ. சிராஜ், 055 9962838 சகோ. அபுல் பரகத் 056 7616346 ஆகியோர்கள் சகோ. மன்சூருக்கான மருத்துவ உதவிகளை பெற்றுக் கொள்ள பரிந்துரைக்கபட்டுள்ள அமீரக TIYA நிர்வாகிகளாவர்.

மேலும், எவனொருவன் பிறிதொருவனுக்கு வாழ்வு அளிக்கின்றானோ அவன் எல்லா மனிதர்களுக்கும் வாழ்வு அளித்தவன் போல் ஆவான். (அல் குர்ஆன் 5:32)

சகோதரர் மன்சூருக்கு தாராளமாக மருத்துவ உதவிகளை வழங்கி எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலியை பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் நினைவூட்டுகின்றோம்.

இவண்
நிர்வாகம்
அமீரக TIYA


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: