பிப்ரவரி 21-ம் தேதி புதிய கட்சித் தொடக்கம்: கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு!

1719 0


பிப்ரவரி 21-ம் தேதி கட்சியின் பெயரை அறிவித்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்க இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன், அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக முன்னரே தெரிவித்திருந்தார். தற்போது, இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என்னை வளர்த்தெடுத்த என் சமூகத்துக்கு நிறைய நன்றி சொல்லியிருக்கிறேன். சொல்லில் சொன்ன நன்றியைத் தாண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன.

அக்கடமைகளின் தொடக்கமாய் எம் மக்களை நேரில் சந்திக்கும் பயணத்தை நான் பிறந்த ராமநாதபுரத்திலிருந்து வருகிற பிப்ரவரி மாதம் 23-ம் தேதி தொடங்கஇருக்கிறேன். ஆரம்பக்கட்டச் சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன். இது நீண்ட நாள்களாகத் திட்டமிட்டிருந்த பயணம். மக்களுடனான இந்தச் சந்திப்பு, புரட்சி முழக்கமோ, கவர்ச்சிக் கழகமோ அல்ல. என் புரிதல். எனக்கான கல்வி.

இதை மக்களோடு மக்களாக நின்று, தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாக இருக்கும் ராமநாதபுரம் மண்ணில் பிப்ரவரி 21-ம் தேதி என் கட்சியின் பெயரை அறிவித்து என் அரசியல் பயணத்தை தொடக்க இருக்கிறேன். இது என் நாடு. இதை நான் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு மாத்திரம் இருந்தால் போதாது. இங்கு தலைவன் என்பவன் வழிநடத்த மாத்திரமன்று. பின்பற்றவே தலைவன் இருக்கவேண்டும். பின்தொடர்வதற்கே ஒரு தலைமைப் பொறுப்பு இருக்கவேண்டும்.

நாமெல்லாம் சேர்ந்து இந்தத் தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம். அந்த நாயகர்களைச் சந்திக்கத்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன். ‘இது ஆட்சியைப் பிடிப்பதற்கானத் திட்டமா?’ என்று கேட்பார்கள். ஆட்சியை ஒரு தனி ஆள் பிடிக்க முடியுமா? யாரின் ஆட்சி, யாரின் அரசு, குடியின் அரசு. அப்படியென்றால் முதலில் அவர்களை உயர்த்தவேண்டும். அதற்கான கடமைகளை நினைவுபடுத்தவேண்டும். அதைநோக்கிய பயணம்தான் இது. உங்களின் ஆதரவோடு இந்தப் பயணத்தை தொடங்குகிறேன். கரம் கோர்த்திடுங்கள். களத்தில் சந்திப்போம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கமலின் அரசியல் பிரவேசத்தை நீங்கள் ஆதரிக்கிறீரா? உங்கள் கருத்தை பதிவிடுங்கள்!


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: