போக்குவரத்து தொழிலாளர் வேளை நிருத்தம் எதிரொலி ! கூடுதல் ரயில் இயக்க முடிவு !!

2005 0


சென்னையில் கூடுதலாக 30 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் – தெற்கு ரயில்வே,

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அடுத்து சென்னையில் கூடுதலாக 30 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆம் தேதி சீசன் டிக்கெட் உள்ளவர்கள் தவிர்த்து, புறநகர் ரயில்களில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பயணிகள் சென்றதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது. 6 ஆம் தேதி 2 லட்சத்து இரண்டாயிரம் பேரும், 7 ஆம் தேதி ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேரும் பயணித்துள்ளனர்.

கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, சென்னை கடற்கரை வேளச்சேரி இரு மார்க்கத்தில் 8 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கடற்கரை  அரக்கோணம், கடற்கரை ஆவடி வழித்தடங்களில் தலா 2 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடங்களில் 9 ரயில்கள் சிறப்பு ரயில்கள் செல்ல உள்ளன. இதேபோல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களுக்கு கூடுதலாக 9 ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: