முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை உடனே முடிவுக்குக் கொண்டு வருமாறு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ஸ்டாலின் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை நீக்கி, தமிழக மக்களின் போக்குவரத்துப் பிரச்சினையைப் போக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்காமல் உள்ள நிலுவைத்தொகை உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றித் தருமாறு வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார். தமது கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டுக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொழிலாளர் பிரச்னையையும், பொதுமக்களின் நெருக்கடியையும் தீர்க்க, அரசு உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தொடர்பான விபரம் எதையும் வெளியிடவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Your reaction