திமுக தலைமை, அதன் 72 நிர்வாக மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் பட்டியலை இன்று அறிவித்தது. அதன்படி தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை அறிவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளராக அதிரையைச் சேர்ந்த எஸ்.எச். அஸ்லம் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த 2011-16 வரையிலான காலகட்டத்தில் அதிராம்பட்டினம் பேரூராட்சி மன்றத் தலைவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.