அதிரையில் கால்பந்து தொடர் போட்டிகள் இவ்வாண்டு அதிகமான முறையில் நடைபெற்று வருகிறது என்றால் மிகையாகாது. அவ்வகையில் கடந்த மாதம் அதிரை AFFA அணி நடத்திய தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் கிராணி மைதானத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
இதனைத் தொடர்ந்து FRIENDS FOREVER நடத்தும் மாநில அளவிலான ஐவர் மின்னொளி கால்பந்து தொடர் 03.08.2022 புதன்கிழமை மாலை 5 மணிக்கு கிராணி மைதானத்தில் துவங்குகிறது.
இத்தொடரில் முதல் பரிசு (வெற்றிக்கொப்பையுடன்) ₹.50,022/- இரண்டாம் பரிசு ₹.30,022, மூன்றாம் பரிசு ₹.20,022, நான்காம் பரிசு ₹.10,022/- என லட்சங்களில் நடைபெறும் இந்த கால்பந்து தொடர் அதிரையர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிரையில் அடுத்தடுத்து கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருவதால் உள்ளூர் கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Your reaction