Thursday, March 28, 2024

SSMG கால்பந்து தொடர் : மன்னார்குடியை சாய்த்த மனச்சை!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை SSM குல் முஹம்மது நினைவாக 22ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 27 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

அவ்வப்போது மழையின் குறுக்கீடுகளால் போட்டியை தொடர்ந்து அடுத்தடுத்து நாட்களில் தொடர முடியாத சூழலில், தொடரின் 6வது போட்டியில் இன்று MARKX 7’S மன்னார்குடி – மனச்சை ஆகிய அணிகள் களம் கண்டது.

முதல் பகுதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் தனது முதல் கோலை பதிவு செய்ய வரிந்து கட்டிக் கொண்டு விளையாடிய போதும் கோல் அடிக்க முடியாமல் சமநிலையடைந்தனர்.

இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் சுதாரிப்போடு விளையாடிய மனச்சை அணி தனது முதல் கோலை பதிவு செய்த அடுத்த சில நிமிடங்களிலேயே தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்து 2 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றியை தன்வசப்படுத்தியது.

நாளைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் ROYAL FC அதிரை – கரம்பயம் அணிகளும், இரண்டாவது போட்டியில் AFFA அதிரை – இளையான்குடி ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...