சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சியின் 14 ஆண்டு விழா நாடெங்கிலும் உள்ள கிளைகளில் இன்று நடைபெற்று வருகிறது.
அதன்படி அதிராம்பட்டினம் கிளையின் சார்பில் 10 இடங்களில் கொடியேற்று நிகழ்வு நடைபெற்றது.
நகர தலைவர் அஸ்லம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விமன்ஸ் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சஃபியா நிஜாமுதீன் கலந்து கொண்டு கொடியேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
வண்டிப்பேட்டை, மெயின் ரோடு,சேர்மன் வாடி உள்ளிட்ட பத்து இடங்களில் கட்சியின் நிர்வாகிகள் துணை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கொடியை ஏற்றினர்.குறிப்பாக ஏரிபுரக்கறை பஞ்சாயத்திகுட்பட்ட பகுதிகளில் முத்து லெஷ்மி அம்மாள் கொடியேற்றினார்.
முன்னதாக SDPI கட்சியின் அலுவலகத்தில் நகர நிர்வாகிகள், விருந்தினர்களை வரவேற்றனர்.
இந்த நிகழ்வில் நகர தலைவர் அஸ்லம், மாவட்ட பொருளாலர் சேக்தாவூது, தொழிலாளர் அணியின் அபுல் ஹசன்,இந்தியன் ஜமால் முகம்மது, ரஜபு முகைதின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ககந்து கொண்டனர்.
Your reaction