Friday, April 19, 2024

முத்துப்பேட்டை : ரயில் மறியல் போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு  – அதிகாரிகள் முன்னிலையில் சமரச பேச்சு –

Share post:

Date:

- Advertisement -

முத்துப்பேட்டை ரயில்வே உபயோகிப்பாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ரயில்வே ஸ்டேசன் புனரமைப்பு உள்ளிட்ட ரயில்வே தொடர்பான முன்னெடுப்புகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்னக ரயில்வே
எர்ணாகுளம்- வேளாங்கண்ணி சிறப்பு வாராந்திர ரயிலை அறிமுகம் செய்தது ஆனால் இந்த சிறப்பு ரயில் முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் நிற்பது இல்லை இதனால் முத்துப்பேட்டை நகர வியாபாரிகள் பொதுமக்கள் குறிப்பாக உலக பிரசித்தி பெற்ற தர்காவுக்கு வந்து செல்லும் யாத்திரிகர்கள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

இதனை மேற்குறிப்பிட்ட சங்கத்தினர் பல்வேறு சட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில்  ரயில் உபயோப்பாளர்கள் சங்கம் சார்பில் மேற்கூறியுள்ள காரணத்தை முன்வைத்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக துண்டு பிரசுரம் வெளியானது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில்வே அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

அதன் பேரில் பாக்கர் அலி சாஹிப் தலைமையில் ஐவர் கொண்ட குழு இன்று திருத்துறைப்பூண்டி தாலுக்கா அலுவலகத்தில் வட்டாட்சியர் ரயில்வே அதிகாரிகள்,முன்னிலையில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு போராட்டகாரர்கள் சார்பில் வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் உரிய இலாக்காக்கள் மூலமாக துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளிக்கப்பட்டது.
குறிப்பாக இவ்வழிதடத்தில் ஓடவிருக்கும் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை அதிகாரிகள் ஏற்று கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அறிவிக்கப்பட்ட ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கான ஒப்புகை சீட்டில் அதிகாரிகள், சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கையொப்பம் இட்டனர்.

முன்னதாக ரயில் மறியல் போராட்டம் குறித்து ரயில்வே உபயோகிப்பாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சூனா இனா என்கிற சுல்தான் இப்ராஹிம் கூறுகையில், சங்கத்தின் சார்பில் எல்லோரையும் ஒருங்கிணைத்து அனைவரின் ஆலோசனைகளை கேட்டு சங்கத்தை வழி நடத்தி வருகிறோம் எங்களுக்கு எல்லா வகையிலும் ஒத்துழைபு நல்கும் அனைத்து முஹல்லா கட்டமைப்பு தலைவர் ஜெர்மன் அலி அவர்களின் ஆலோசனைகளை பெற்று சங்கத்தை வழிநடத்தி வருவதாக கூறுகிறார்.

மேலும் ரயில்வே தொடர்பான போராட்டங்களுக்கு ஒட்டுமொத்த முத்துப்பேட்டை மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் குழுக்களாக பிரிந்து தனித்தனியே போராடுவதில் பலனில்லை என்கிறார்.

பேரூராட்சி மன்ற தலைவர் நாவாசை தொடர்பு கொண்டு ரயில்வே தொடர்பாக கேட்டபோது தாம் சார்ந்துள்ள திமுக கட்சியின் MLA MPக்களோடு இது தொடர்பாக  பேசி வருவதாகவும், விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்றார், இது தவிர முத்துப்பேட்டை பேரூராட்சி உட்பட்ட 18 வார்டு உறுப்பினர்களை கொண்டு மன்ற தீர்மானத்தை நிறைவேற்றி ரயில்வே இலாக்கா உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிக்களுக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தார்.

இதுதவிர ஜாம்புவானோடை சதீஸ் என்ற சமூக ஆர்வலரிடம் பேசிய வகையில் முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் நிறைந்த சுற்றுலா தலமாக உள்ளது மேலும் ஆண்மிக சுற்றுலாவுக்கு என தினந்தோறும் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் வந்து செல்லும் இடமாக உள்ளதால் முத்துப்பேட்டைக்கு ரயில்வே நிர்வாகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...