இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திரத்தை நினைவுகூரும் வகையில் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் (AKAM) இன் கீழ் இந்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பல்வேறு நல திட்ட பணிகளை திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.
அதன் ஒருபகுதியாக 2022 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 75000 மரக்கன்றுகளை நடுவதற்காக, மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் நகரங்கள், குடியிருப்புக் காலனிகள், அலுவலகங்கள், உற்பத்திப் பிரிவுகள் போன்ற இடங்களில் பிளாண்டேஷன் டிரைவ் எனும் பசுமை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இன்றுகாலை சுமார் 30 மரக்கன்றுகளை நட்டுள்ளது.
இதில் திருச்சி விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் AAI,
AIஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் விமான நிலைய மேலாளர் MMS ஜாபர் சாதிக், திருச்சிராப்பள்ளி ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா ஊழியர்கள், சுங்கத்துறை அதிகாரிகள் , குடியுரிமை துறை அதிகாரிகள் மற்றும் அனைத்து ஏர்லைன்ஸ் மேலாளர்கள், CISF அதிகாரிகள்,
உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டு மரக்கன்று நட்டனர்
Your reaction