அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் ஒயிட் ஹவுஸ் குழும தொழிலதிபர் முஹ்ம்மது இலியாஸ் கலந்து கொண்டு மானாக்கர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
அப்போது பேசிய அவர் பள்ளி முடிந்து கல்லூரி வாழ்வில் அடியெடுத்து வைத்து இன்று பட்டம் பெற்றுள்ள மாணவர்கள் நாளைய இந்தியாவின் தலைமுறைகள் என்றும் நமது வீட்டிற்கும் நாட்டிற்கும் வீட்டிற்கும் நன்மை பயக்க வேண்டும் என்றார்.
குறிப்பாக நமது சமூதாய மக்கள் கல்வியறிவு பெற்று அனைத்து துறைகளிலும் கோலோச்ச வேண்டும் என கேட்டு கொண்டார்.
நாகப்பட்டிணம் மாவட்ட துணையாட்சியர் கலந்து கொண்டு உரையாற்றுகையில், செல்போனால் சீரழியும் சமுதாயம் குறித்தும், இதனால் ஏற்படும் சமூக பிரச்சனைகள் குறித்தும் உரையாற்றினார்.
முன்னதாக விருந்தினர்களை MKN ட்ரஸ்ட் செயலாளர் மீரா சாகிப் வரவேற்றார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் மாணவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் என நூற்று கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
Your reaction