கூட்டணி தர்மம் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அதிரை நகர்மன்ற துணை தலைவர் பதவியை திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் கூட்டு சேர்ந்து தட்டிப்பறித்து நகர செயலாளர் இராம.குணசேகரனிடம் ஒப்படைத்தனர். இதனால் திமுக கூட்டணியில் உருவான விரிசல் சிலரது சுய விருப்பு வெறுப்பால் பெரிதாகி வருகிறது. இதன் ஒருபகுதியாக நகர்மன்ற குழு உறுப்பினர்கள் நியமனத்தில் கூட்டணி கட்சிகளை ஓரங்கட்டும் பணியை திமுக அதிருப்தி நிர்வாகிகளும் கவுன்சிலர்களும் தொடர்ச்சியாக செய்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசி இருக்கும் இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் கோட்டூரார் ஹாஜா மைதீன், அரசு பள்ளி மேலாண்மை குழு உள்ளிட்டவற்றில் கூட்டணி கட்சிகளை கலந்தாலோசிக்காமல் அதிரை நகர திமுக தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். அத்தோடு திமுக கூட்டணி என்பது மாநில அளவிலான கூட்டணி என்பதை சுட்டிக் காட்டி இருக்கும் அவர், இது அதிரைக்கு நல்லதா என்பதை நகர திமுக சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Your reaction