அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது குறிப்பாக ரமலான் காலம் என்பதால் இரவு வணக்கங்களுக்காக இஸ்லாமியர்கள் அதிகளவில் பள்ளிகளில் கூடுவர்.
இவர்கள் கொசுக்கடியால் பாதித்து விட கூடாது என்பதை கருத்திற்கொண்டு நகர தலைவர், துணைத்தலைவர் ஆலோசனையின் பேரில் அனைத்து வழிப்பாட்டு தளங்களுக்கும் கொசு ஒழிப்பு மருந்துகள் தெளிப்பது எனவும் முதற் கட்டமாக வழிபாட்டு தளங்களை சுற்றியுள்ள புதர்களை அழித்து கிருமி நாசினி தெளிக்க முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை நகராட்சி சென்ற நகரதலைவர் MMS தாஹிரா அம்மாள் அப்துல் கறிம், அதற்கான பணிகளை முடுக்கி விட்டார்.
போர்கால அடிப்படையில் பணிகளை முடித்து கொடுக்க வேண்டும் எனவும் துப்புரவு தொழிலாளர்களை அவர் கேட்டு கொண்டார்.
Your reaction