இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் நோன்பு மாதம் இன்றுமுதல் ஆரம்பமாக உள்ளது.
ஹிஜிரி வருடம் பிரகாரம் ரமலான் மாதம் பிறை 1 முதல் 30வரை அதிகாலை 5மணி முதல் மாலை 6:30 வரை இறைவனுக்காக உண்ணாமல் பருகாமல் உண்னா நோன்பிருப்பர்.
வயோதிகர்கள், நோயாளிகள் தவிர்த்து இதர முஸ்லீம்கள் மீது கட்டாய கடமையாகும்.
ரமலான் முடிந்து ஷவ்வால் பிறை 1 அன்று ஈகை திருநாள் கொண்டாடப்படுகிறது.
பெருநாள் தொழுகைக்கு முன்னர் வரியவர்களுக்கு தான தர்மம் செய்வது ஏழைகளின் வாழ்வாதத்திற்கு மிகவுன் உகந்ததாகும்.
அதனால் ஜக்காத் எனும் ஏழை வரியை பெருநாளைக்கு முன்னர் வழங்கிடுவர்.
ரமலான் மாதம் இன்று தொடங்குவதை ஒட்டி தமிழகத்தின் அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சில ஊர்களில் ஏழைகள் வழிப் போக்கர்கள் பயன்பெறும் வகையில் சஹர் உணவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக சமூக ஊடகங்களின் வாயிலாக தெரியவருகிறது.
Your reaction