ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் டெவலப்மண்ட் ஆப் இந்தியா( இந்திய அளவிலான பள்ளிகள் விளையாட்டுக் குழு)
& இண்டர்நேஷனல் ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் பெடரேசன் (பிரான்ஸ் ) இணைந்து நடத்திய தேசிய அளவிலான இறகு பந்து சாம்பியன்ஷிப் போட்டி புனேவில் சத்ரபதி சிவாஜி ஸ்போர்ட்ஸ் அகாடமியில் மார்ச் 19 முதல் மார்ச் 21 வரை 3 நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பேட்மிண்டன் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். பல சுற்றுகளில் வெற்றி பெற்று 18 வயதிற்குட்பட்டோர்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் பட்டுக்கோட்டை SET வித்யா தேவி பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவி S. ஹாஸ்னி வெண்கல பதக்கம் வென்று பிரான்ஸ் நாட்டில் நடக்க கூடிய உலக அளவிலான பேட்மிண்டன் போட்டியில் இந்தியா சார்பாக விளையாட தேர்வு செய்ய பட்டுள்ளார். இந்திய அணிக்காக SET பள்ளி மாணவி ஹாஸ்னி பிரான்ஸ் நாட்டில் நார்மண்டா நகரில் நடைபெற கூடிய போட்டியில் வெற்றி பெற மத்திய மாநில விளையாட்டு துறை நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்
SET பள்ளி நிர்வாக இயக்குநர் எல்.கோவிந்தராஜ், ஆசிரியர்கள், மாணவ – மாணவிகளும் வாழ்த்தினர். இதற்கு பக்கபலமாக இருந்த ராக்ஸ் அகடாமியின் நிர்வாக இயக்குனர் ஸ்வேதா கிருஷ்ணமுர்த்தி மற்றும் இந்திய பேட்மிண்டன் பயிற்சியாளர் மகேந்திரன் ஆகியோரை SET பள்ளி நிர்வாகம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
Your reaction