அதிரை நகர SDPI தலைவர் அஸ்லம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அதிரை மேலத்தெரு விரிவாக்க பகுதியில் வசிக்கும் மக்களை வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்துவதை திமுக நிறுத்த வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தொக்காலிகாடு ஊராட்சியில் உள்ள மேலத்தெரு விரிவாக்க பகுதியை அதிரையுடன் இணைக்க நகர்மன்றத்தில் 13வது வார்டு SDPI கவுன்சிலர் பெனாசிரா அஜாருதீன் வலியுறுத்துவார். அதிரை மக்கள் எந்த ஊராட்சியில் வசித்தாலும் அவர்களின் நலனுக்காக அதிரை நகர SDPI தொடர்ந்து உழைக்கும். உள்ளாட்சி எல்லையை சுட்டிக்காட்டி பொறுப்புகளை தட்டிக்களிக்கும் திமுக கவுன்சிலர்களுக்கு மத்தியில் SDPI கட்சியின் செயல்வீரர்கள் பதவிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சமூக பணியில் களமாடுவார்கள்” இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Your reaction