தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு!

751 0


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட 22வது பொதுக்குழு கூட்டம், நேற்று 06.03.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பட்டுக்கோட்டை VPS திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தை மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹீம் மற்றும் மாநில செயலாளர் கோவை அப்பாஸ் ஆகியோர் தலைமையேற்று நடத்தினர். இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் விபரம் :

மாவட்ட தலைவர் : அதிரை ராஜிக்

மாவட்ட செயலாளர் : ஹாஜா ஜியாவுதீன்

மாவட்ட பொருளாளர் : அப்துல் ஹமீது

மாவட்ட துணை தலைவர் : வல்லம் ஜாபர் அலி

மாவட்ட துணை செயலாளர் : ஆவணம் ரியாஸ், அஷ்ரப் அலி, அப்துல்லாஹ்

மாவட்ட மருத்துவரணி செயலாளர் : அரபாத்

மாவட்ட மாணவரணி : இத்ரிஸ்

மாவட்ட தொண்டரணி: சித்திக்

ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

இப்பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :

  1. இஸ்லாமிய சமுதாயத்திற்கு வழங்கி இருக்கின்ற 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி தர தமிழக அரசை, இப்பொதுக் குழு மூலம் வலியுறுத்தப்படுகிறது.
  2. உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மாநில பாகுபாடின்றி தாயகத்திற்கு கொண்டுவர துரித நடவடிக்கை எடுக்குமாறு இப்பொதுக்குழு மூலம் வலியுறுத்தப்படுகிறது.
  3. தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவலாக தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து பொதுமக்களை காயப்படுத்தி வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. குறிப்பாக பட்டுக்கோட்டை பகுதியில் 50க்கும் மேற்பட்ட மக்களை தெரு நாய்கள் கடித்து இருப்பதால் விரைந்து நடவடிக்கை எடுக்கக வலியுறுத்தப்படுகிறது.
  4. மாநகராட்சி அலுவலகங்களில் புழக்கத்திலிருந்த மாண்புமிகு மேயர் என்பதை மாற்றி வணக்கத்திற்குரிய மேயர் என்று மாற்றுவது மதச்சார்பின்மைக்கு எதிரானது. ஆகவே அமைச்சர் மா.சுப்பிரமணியனின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரிக்கவேண்டும் என்பதை பொதுக்கழு வாயிலாக வலியுறுத்தப்படுகிறது.
  5. நாட்டில் நடக்கக்கூடிய அனைத்து விதமான குற்றச் செயல்களுக்கும் குடிப்பழக்கம் மிக முதன்மையான காரணமாக இருப்பதால் வருங்காலங்களில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ஏற்படுத்த இப்பொதுக்குழு மூலம் வலியுறுத்தப்படுகிறது.
  6. குழந்தைப் பருவத்தில் போதை பழக்கத்திற்கு அடிமை ஆவதில் முதன்மையாக இருப்பது கஞ்சா பழக்கமாகும். இளைஞர்கள் அதிகமாக இப்பழக்கத்தில் அடிமையாக இருப்பதால் கஞ்சா விற்பனையாளர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்கு காவல்துறைக்கு வலியுறுத்தப்படுகிறது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: