நகர்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19.02.2022 நடைபெற்று 22.02.2022 அன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், அதிரை நகர்மன்றத்தில் பெரும்பான்மையான வார்டுகளில் திமுக வெற்றி வாகை சூடியது.
இருப்பினும், அதிரை நகர்மன்ற சேர்மன் பதவிக்கு இன்னமும் இழுபறி நீடித்துக் கொண்டிருக்கும் சூழலில், அதிரை திமு கழகத்தில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக உறுப்பினராக இருந்து வரும் முகமது சரீப் உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக சார்பில் தொடர்ந்து வெற்றியை தன்வசமாக்கி கொண்டிருக்கிறார்.
மேலும், 25 ஆண்டுகளுக்கு முன்னர் பட்டுக்கோட்டை ஒன்றிய திமுகவின் பொருளாளர் பதவி வகித்த மறைந்த N.K.S. முகமது ஜெக்கரியாவின் பேரனாகிய முகமது சரீப், திமுக அரசின் நல்ல பல திட்டங்களை அவர் வெற்றி பெற்ற வார்டு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அதிரை நகர மக்களுக்கும் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கும் இவரை நகர சேர்மனாக நியமிப்பதில் ஏன் திமுக தலைமை தயக்கம் காட்டுகிறது என்கிற கேள்வி அதிரை மக்களிடத்தில் தற்போது பேசும் பொருளாகியுள்ளது.
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 10 மாதங்களிலேயே பொதுமக்கள் மத்தியில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நன்மதிப்பை பெற்றிருக்கும் சூழலில், அதிரை நகராட்சி சேர்மன் பதவிக்கு Seniority வார்டு வெற்றிகள் மூப்பு அடிப்படையில் திமுக தேர்வு செய்யுமா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
Your reaction