குப்பை அள்ளுதல், பொது பிரச்சனைகள் குறித்து நகராட்சிக்கு புகார் அளித்து தீர்வுபெற ஸ்மார்ட் அதிரை மொபைல் ஆப், அதிரையை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உள்ளிட்ட 27 வாக்குறுதிகளை SDPI கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் அதிரையின் முன்னேற்றத்தில் வெளிநாடுவாழ் அதிரையர்களின் பங்களிப்பை உறுதி செய்ய தனி குழு அமைக்கப்படும் என்றும் SDPI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வெளிநாடுகளில் உள்ள அதிரையர்களுடன் இணையவழி கலந்துரையாடலை SDPI ஏற்பாடு செய்வித்துள்ளது. இந்திய நேரப்படி இன்றிரவு 10மணிக்கு துவங்கும் கலந்துரையாடலில் அதிரையர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Zoom லிங்க்கை பயன்படுத்தி இந்த கலந்துரையாடலில் பங்கேற்கலாம்.
https://us02web.zoom.us/j/8734843749?pwd=OHhTYW0reUg1NVFhUE50Yy9vTHlWQT09
Your reaction