நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட அதிரையில் வார்டு மறுவரையரை செய்ததில் ஆளும் திமுகவினர் குளறுபடிகள் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் மக்கள் தொகையைவிட வாக்காளர்கள் எப்படி அதிகம் வந்தனர் என்ற கேள்விக்கு இன்று வரை உரிய பதில் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைமையில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கடந்த மாதம் அதிரை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் Z.முகம்மது தம்பி தாக்கல் செய்த மனுவில் முகாந்திரம் இருப்பதால் கடந்த பிப்ரவரி 4ம் தேதி அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கிருஷ்ணா ராமசாமி, பாரெஷ் உபத்யாய் அமர்வு, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே அதிரை நகராட்சி வார்டு மறுவரையரை தொடர்பாக தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம், அதிரை நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், அதிரை தொடர்பான வழக்கின் மீது தொடர்ந்து விசாரணை நடைபெறுவது உள்ளூர் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Your reaction