ஒத்த சீட்டு கலாசாரத்தை ஒழிக்க வந்த மனிதநேய மக்கள் கட்சி, அதிரையில் திமுக வேண்டா வெறுப்பாக கொடுத்த ஒத்த சீட்டை வாங்கி கொண்டு 24வது வார்டில் போட்டியிடுகிறது. இதனிடையே கடந்த மக்களவை, சட்டமன்ற தேர்தல்களில் திமுக-வை வெற்றிபெற செய்ய இரவு பகல் பாராமல் உழைத்த திமுகவினருக்கு அங்கு சீட்டு கொடுக்காமல் கூட்டணி கட்சிக்கு சீட் கொடுத்ததை அப்பகுதி பிரமுகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில், மக்களின் ஆதரவோடு 24வது வார்டில் சுயேச்சையாக நஜ்முதீன் களம் காண இருக்கிறார். ஒன்றுபட்ட சமூதாய கூட்டணியில் சேராமல் ஒத்த சீட்டுக்காக திமுக-விடம் மண்டியிட்ட மமக-வுக்கு திமுக ஆதரவாளர்கள் ஓட்டு போடுவார்கள் என்ற உத்தரவாதம் இதன் மூலம் பொய்த்து போய்விட்டது. இதற்கு மமக கவுரவமாக சமூதாய கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்து இருக்கலாம். முன்னதாக திமுக சார்பில் போட்டியிட நகர செயலாளர் இராமகுணசேகரனிடம் நஜ்முதீன் விருப்பமனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Your reaction