நடப்பு அதிரை நகராட்சி தேர்தலில் SDPI, மஜக, ஒன்றுபட்ட சமூதாய கூட்டமைப்பு (OSK) ஆகியவை ஓரணியில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்து தேர்தல் களத்தை சந்தித்து நகராட்சி மன்றத்தில் வெற்றி கொடிநாட்ட இந்த கூட்டமைப்பு சூளுரைத்துள்ளது. இந்நிலையில், SDPI கட்சியின் சார்பில் அதிரை நகரை மேம்படுத்தும் வகையில் முக்கிய அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை விரைவில் அக்கட்சியின் தலைவர்கள் வெளியிட உள்ளனர். அத்தோடு 14 வார்டுகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலும் தலைமையின் ஒப்புதல் கிடைத்தவுடன் வெளியிடப்பட இருக்கிறது.

Your reaction