தமிழகத்தில் எதிர்வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிக் கல்லூரிகளை மீண்டும் திறக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. இத்துடன் பள்ளிக், கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி (01.02.2022) முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Your reaction