சிட்னி பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கு குவிந்த ஆதரவு : மகிழ்ச்சியில் திளைக்கும் சிட்னி கிரிக்கெட் நிர்வாகம்!!

971 0


அதிரை சிட்னி கிரிக்கெட் கிளப் சார்பாக சிட்னி பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த டிசம்பர் மாத இறுதியில் துவங்கி ஜனவரி 22.01.2022 சனிக்கிழமை நிறைவு பெற்றது.

இத் தொடரில் பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி விளையாடினர்.

இறுதியில் VAA NANBA CC மதுரை – PCC பட்டுக்கோட்டை ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று பலப்பரீட்சை நடத்தினர்.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த PCC பட்டுக்கோட்டை அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களை எடுத்தது.

சிட்னி பிரிமியர் லீக்கின் முதல் டைட்டில் வின்னராவதற்கு எளிய இலக்கான 114 ரன்களை துரத்திய VAA NANBA CC மதுரை அணி (17.5 ஓவர்களில்) அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமநிலையடைந்தது.
இதனால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டதில் VAA NANBA CC மதுரை அணி சிட்னி பிரிமியர் லீக்கின் முதல் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

முதலிடம் பிடித்த VAA NANBA CC மதுரை அணிக்கு ₹.50,000/- ரொக்கத்துடன் சுழற்கோப்பையும், இரண்டாமிடம் பிடித்த PCC பட்டுக்கோட்டை அணிக்கு ₹.30,000/- ரொக்கத்துடன் சுழற்கோப்பையும், மூன்றாமிடம் மற்றும் நான்காமிடம் பிடித்த அதிரை WCC மற்றும் JAI BOYS அரியலூர் ஆகிய அணிகளுக்கு தலா ₹.15,000/- ரொக்கமும் வழங்கப்பட்டது.

அதிரை வரலாற்றில் உலகத் தரத்திற்கு இணையான ஒரு முழு கிரிக்கெட் தொடரையும் சிறந்த வர்ணனையுடன் நேரடி ஒளிபரப்பு செய்த சிட்னி கிரிக்கெட் நிர்வாகத்தை அதிரையர்கள் மட்டுமல்லாது வெளியூர் விளையாட்டு பிரியர்களும் பாராட்டி வருகின்றனர். இதனால் சிட்னி கிரிக்கெட் அணி நிர்வாகம் மகிழிச்சியில் திளைத்துள்ளனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: