சோசியல் மீடியாவின் செயல்பாட்டாளரான அதிரை உபயா அவர்கள் விடுதலை சிறுத்தைகள் இஸ்லாமிய சனநாயக பேரவை மாநில செயலாளர் அ.ர.அப்துல் ரஹ்மான் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துகொண்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “தாழ்த்தபட்டோர், ஒடுக்கபட்டோர், சிறுபான்மையினரின் காவலனாக அவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் புரட்சி போராளியாக, அவர்களின் மீதான அடக்குமுறைக்கு எதிரான அரணாக எழுச்சி தமிழர் திருமாவளவன் அவர்களும் அவர் சார்ந்த விடுதலை சிறுத்தைகளும் என்றும் சமூக நீதியை கடைபிடிக்கும் கட்சியாக, சமதர்மத்தை நிலைநாட்டும் சக்தியாக என்றும் நிலைநிற்கும் என்பதை உணர்ந்ததாலேயே இக்கட்சியில் இணைகிறேன்.
உண்மையை உடைத்து பேசும் தலைவராக, தான் கொண்ட கொள்கையில், சொன்ன கருத்தில் என்றும் பின்வாங்காத எழுச்சி தமிழர் திருமாவளவன் பின்செல்வதே இன்றைய காலத்தின் கட்டாயம் என்பதை என்னைபோன்ற இளைஞர்கள் உணர்ந்து தங்கமகன் திருமாவின் கரத்தை வலுபடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து கைகோர்த்து பயணிப்போம் வாருங்கள்”
என்றதோடு,
“விடுதலை சிறுத்தை கட்சியில் தன்னையும் இணைத்து சமூக நீதி, சமதர்மம், சமஉரிமை என்ற கொள்கையை அடிப்படையாக வைத்து அடக்குமுறை சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைய விரும்புவர்கள் தாராளமாக அதிரை உபயாவை தொடர்புகொள்ளுங்கள் என்ற கோரிக்கையும் முன் வைத்தார்.
Your reaction