21 வார்டுகளை கொண்டு பழம்பெரும் தேர்வுநிலை பேரூராட்சியாக இருந்துவந்த அதிரையை நகராட்சியாக தற்போதைய திமுக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அதிரை மக்கள் பெரும்பாலும் கண்டுக்கொள்ளவும் இல்லை, கொண்டாடவும் இல்லை. இந்நிலையில், அதிரை நகராட்சியாக அறிவிக்கப்பட்டாலும் தற்போதைக்கு சொத்து வரி உள்ளிட்ட இதர வருவாய்க்கான வரி உயர்த்தப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் சுற்றுவட்டார ஊராட்சி மன்றங்களின் பதவிக்காலம் மூன்றரை ஆண்டுகள் இருப்பதால் அதிரை நகராட்சியின் எல்லை விரிவாக்கத்திற்கும் குறுகிய காலம் வாய்ப்பில்லை. இதனிடையே அதிரை நகராட்சியாக அறிவிக்கப்பட்டதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்பதால் உள்ளூர் உடன்பிறப்புகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Your reaction