தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பலர் திமுகவில் இணைந்தனர்.
அதிராம்பட்டினத்தில் நேற்று அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள், பேரூர் திமுக அலுவலகமான அண்ணா படிப்பகத்தில் திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஏனாதி பாலசுப்ரமணியன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர்.
புதிதாக திமுகவில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை, அதிரை பேரூர் திமுக செயலாளர் இராம. குணசேகரன் மற்றும் பேரூர் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Your reaction