கடந்த இரண்டு நாட்களாக செய்தி ஊடகம் வாயிலாக வெளியான அதிராம்பட்டினம் அவிஸோ காப்பகம் குறித்த சர்ச்சை செய்திக்கு விளக்கமளித்து உள்ளது.
அதில் மரணித்த மன நோயாளி இயற்கை மரணம்தான் அடைந்தான் என்றும், இது குறித்து முறையாக சம்பந்தப்பட்ட ஊர் ஜமாத்தார்களிடம் தெரிவிக்கப்பட்டு விட்டது என அவிஸோ நிர்வாகி சேக் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
மேலும் மறைந்த சிறுவனுக்கு தாய் முன்னரே இறந்து விட்டதாலும்,சிறுவனின் தந்தை கண்டுகொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.
நிலைமை இவ்வாறிருக்க கலிமா என்ற நபர் அபாண்டமாக பொய்யான குற்றச்சாட்டை கூறி புகார் அளித்துள்ளார் என்றும், கலிமா காப்பகத்தின் காசோலை மோசடியில் ஈடுபட்டுள்ளார் எனவும் அவர் மீது ஆதாரத்துடன் வழக்கு பதிந்து உள்ளது என்பதையும் தெரிவித்தார்.
அவிசோ நிர்வாகம் வெளிப்படைத்தன்மை கொண்டு செயல்படுகிறது எனவும், எங்கள் நிறுவனத்தின் மீது களங்கம் விளைவிக்க சிலர் முயல்வதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து உள்ளார்.
அவிஸோவில் நடந்த உண்மை என்ன ? நிர்வாக தரப்பில் விளக்கம்!
Your reaction