பிரிலியண்ட் பள்ளியுடன் இணைந்து அசத்தும் லயன்ஸ் கிளப்!
அதிராம்பட்டினம் லயன்ஸ் கிளப்பின் புதிய நிர்வாகம் சமீபத்தில் பொறுப்பு ஏற்று கொண்டது.
இதனை தொடர்ந்து பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபம் அருகே தினமும் 50 நபர்களுக்கு மிகாமல் தலைவாழை இழைவிரித்து மிகுந்த மரியாதையுடன் வீட்டில் வைத்து விருந்தோம்பல் செய்யப்படுகிறது.
உண்மை பயனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு விருந்து படைக்கும் உன்னத பணியை அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
தலைவர் சூப்பர் அப்துல் ரஹ்மான் தலைமையில், பிரிலியண்ட் CBSC பாடசாலையின் அனுசரணையுடன் நடக்கும் இத்திட்டத்தில் செயலாளர் குப்பாஷா அஹமது கபீர்,பொருளாளர், முகமது ஆரீஃப்,,பேராசிரியர் அப்துல் காதர், தமிழ்த்துறை பேராசிரியர் செய்யது அகமது கபீர், ஜலீலா மொய்தீன், பேராசிரியர் கணபதி, சார்லஸ், அப்துல் ஜலீல் சாரா அஹமது பிரின்ஸ் ராவுத்தர்,சுதாகர் பகுருதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி மகிழ்கின்றனர்.
Your reaction