மாயவரம்-திருவாரூர்- திருத்துறைப்பூண்டி- அதிராம்பட்டினம்- பட்டுக்கோட்டை வழியாக இருந்த குறுகிய இருப்பு பாதையை அகற்றிவிட்டு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டது.
இதன் காரணமாக நிறுத்தப்பட்ட ரயில் போக்குவரத்தை தொடங்க பல்வேறு அமைப்புகள் கட்சிகள் போராடி வருகின்றன.
இந்த நிலையில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம்,SS பழனிமாணிக்கம், நவாஸ்கனி ஆகியோர்கள் இணைந்து டெல்லியில் ரயில்வே வாரியத்தலைவர் சுனில் சர்மாவை சந்தித்து மனு அளித்தனர்.
அதில் சுதந்திர இந்தியாவுக்கு முன்னரே இத்தடம் அமைக்கப்பட்டது என்றும், அகல ரயில் பாதை பணிகள் 100℅ முழுமை அடைந்து இன்று வரை ரயில்களை இயக்க வில்லை என்று குறிபிட்டுள்ளனர்.
இத்தடத்தில் அதிவேக சோதனை ஓட்டம் எல்லாம் முடிந்த நிலையில் ரயில்களை இயக்க நிர்வாகம் மெத்தனம் காட்டுவது ஏன் கேள்வி எழுப்பினர்.
மனுவை பெற்றுக் கொண்ட சுனில் சர்மா இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
Your reaction