அதிராம்பட்டினத்தின் மிக முக்கிய சாலையான மகிழை ரோட்டில் தக்வா பள்ளி முக்கத்தில் பரப்பான சூழ்நிலையில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைபள்ளியின் சுற்று சுவரோடு ஓடும் சாக்கடை கால்வாயில் இன்று காலையில் முதியவர் ஒருவர் சைக்கிளிலிருந்து தவறி சாக்கடையில் விழுந்த பரிதாபகரமான நிகழ்வு காண்போர் மனதை கண்கலங்க செய்தது.
அவரின் உடலில் சிராய்ப்புகள் ஏற்பட்டதோடு அவரின் தொப்பி சாக்கடையில் விழுந்து மிதந்ததோடு அவரின் வெள்ளை உடைகள் சாக்கடையால் மூழ்கி நனைந்து பரிதாபகரமான நிலையை ஏற்படுத்தியது.
அந்த கழுவு நீர் வாய்க்காலுக்கான சாலை தடுப்பு அமைக்கபடாததே இந்த நிகழ்வுக்கு முக்கிய காரணமாக சொல்லபடுகிறது.
அதிரையின் தன்னார்வலர்கள் பலரும் பலமுறை இதை பற்றிய புகார் கொடுத்தும் இதற்கு தடுப்பு அமைக்கபடவில்லை. அருகில் பெண்கள் மேல்நிலைபள்ளியும் வணிக, வியாபார சந்தைகளும் இருப்பதால் இதன் வழியே அதிக போக்குவரத்தும் அருகே பள்ளியும் பள்ளிவாசலும் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் மாணவிகளின் நடமாட்டம் மிகுந்த பகுதியாக இருந்தும் சாக்கடையை மூடாமலும் அதற்கான தடுப்புகளும் ஏற்படுத்தாமல் இருப்பதால் தினந்தோறும் விபத்துகள் ஏற்படுத்துகிறது.
பலருக்கு கைகால் முறிந்துள்ளது. உயிர் பலி ஏற்படும் முன் இதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்களால் எதிர்பார்க்கபடுகிறது.
ஏதேனும் உயிர்பலி ஏற்படுமுன் நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி????
Your reaction