வக்ஃப் சொத்துக்களை பாதுகாத்தல்;மீட்டெடுத்தல், உலமாக்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்குதல்,உலமா நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைகளை உயர்த்தி வழங்குதல்;தலை சிறந்த மார்க்க மேதைகள் அண்ணல் அஃலா ஹழரத் மற்றும் அமானி ஹழரத் ஆகியோரின் பெயரில் நூலகம் அமைத்தல் உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் மௌலவி ஷம்சுல் இக்பால் தாவூதி தலைமையில் மாநில நிர்வாகிகள் வக்ஃப் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி K.S. மஸ்தான் அவர்களை சந்தித்து ஏழு அம்ச கோரிக்கைகளில் உள்ள விஷயங்களை எடுத்துரைத்தனர்;
அமைச்சர் இதனை கவனமாக கேட்டறிந்து துறை சார்ந்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வாக்குறுதியளித்தார்.
இந்நிகழ்வின்போது இமாம்ஸ் கவுன்சிலின் மாநில துணை தலைவர் மௌலவி முஹம்மது யஹ்யா தாவூதி,மாநில செயற்குழு உறுப்பினர் மெளலவி ஆபிருத்தீன் மன்பயீ,சேலம் மண்டல தலைவர் முஹம்மது ஷுஐபு ஃபைஜி, மெளலவி அபூபக்கர் சித்தீக் தாவூதி மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் விழுப்புரம் ஏரியா தலைவர் செஞ்சி சாதிக் பாஷா ஆகியோர் உடனிருந்தனர்.
Your reaction