கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவும் நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது. அதிரை கடற்கரைத்தெரு முஹல்லாவாசிகள் சார்பில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு இன்று காலை கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை A. சாகுல் ஹமீது, P. செய்யது முஹம்மது, P. செய்யது புஹாரி, M.B. அஹமது கபீர், ஜனாப். பகுருதீன், M. முஹம்மது இஸ்மாயீல், முஹம்மது இத்ரீஸ், L. முஹம்மது இஸ்மாயீல் மற்றும் தெருவாசிகள் பலரும் செய்திருந்தனர்.












Your reaction