தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன், துணை தலைவர் அப்துல்லாஹ், மாநகர கிளை நிர்வாகிகள் அரபாத், ஹாலித் மற்றும் தன்னார்வளர் பாரூக் ஆகியோர் நேற்று(20/05/2021) மாலை தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் IASஐ சந்தித்து கொரோனா தடுப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் தேவை, தன்னார்வளர்களை முன்களப் பணியாளர்களாக அரசு அறிவிக்கக்கோரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளுக்கும் உடனடியாக மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்தார், மேலும் அரசு உறுதுணையாக நிற்கும் என்றும் அதற்கான சுகாதார உதவிகளையும் செய்து தரும் என்றும் உறுதி கூறினார்.


Your reaction