அதிராம்பட்டினத்தில் ஈத் பெருநாள் நேற்று(14-05-21) கொண்டாடப்பட்டது. அப்போது புதுத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் பெண்கள் பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் தொழுவதற்கு அனுமதி கோரியுள்ளனர் . தொழுவதற்கு அனுமதி அளித்துள்ளனர் அவ்வீட்டினர். ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றிய பின் அவ்விருவரும் அங்கிருந்து அவசரகதியாக கிளம்பியுள்ளனர். இதனை அவ்வீட்டினர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இதனிடையே திடீரென அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தை காணாமல் போயுள்ளது. உடனே குழந்தையை பெற்றோர் தேடியுள்ளனர். அப்போது வாசலில் படுத்த நிலையில் குழந்தை இருந்துள்ளது. மேலும் அக்குழந்தையின் கையில் இருந்த இரண்டரை சவரன் தங்க வளையல்கள் காணாமல் போயுள்ளது. அதுமட்டுமின்றி குழந்தை மயக்க நிலையில இருந்துள்ளது.
இதனால் பதற்றமடைந்த பெற்றோர் அந்த மர்ம நபர்களை தேடியுள்ளனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இது போன்ற கொள்ளை கும்பல் அதிரை உள்ளிட்ட இஸ்லாமியர்கள் வசிக்கும் ஊர்களில் கைவரிசை காட்டி வருகிறார்கள் என்றும், இவர்களை போலிசார் தனிப்படை அமைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Your reaction