Friday, April 19, 2024

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி!

Share post:

Date:

- Advertisement -

நாட்டில் தற்போது ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால் ஸ்டெர்லைட் ஆலையை நான்கு மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யஅரசு அனுமதித்துள்ளது. உள்ளூர் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு அமைத்து ஆலை கண்காணிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அனைத்து கட்சி கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா பரவின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் தினசரி கொரோன பாதிப்பு கடந்த சில தினங்களாகவே மூன்று லட்சத்தைக் கடந்துள்ளது. அதேபோல நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டிலுள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

இதன் காரணமாக டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், உற்பத்தி இல்லை. ஆக்சிஜன் இல்லாமல், பொதுமக்கள் உயிரிழக்கும் அவலங்களும் நடந்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையங்களையும் ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தவிரவும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நிறுவனங்களுக்குத் தற்காலிக அனுமதியும் அளிக்க முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் தினசரி 500 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்பதால் ஆலையை இயக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விசாரணையில், ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு ஏன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். ஆனால், ஸ்டெர்லைட் நிர்வாகம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்ளும் நிபுணர்கள் தங்களிடம் மட்டுமே உள்ளதாகவும் ஆலை நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்து ஆலோசிக்க தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள மாநிலத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விசிக, மதிமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் திறக்கலாம் என்றும் ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகளைக் கண்காணிக்கக் குழுக்கள் அமைக்க வேண்டும் என்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக வலியுறுத்தியது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், மாநிலத்தில் தற்போது ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. ஸ்டெர்லைட் அலையைத் திறப்பது அரசின் நோக்கம் அல்ல, ஆலையை மூடியதே தமிழக அரசு தான். ஆக்சிஜன் உற்பத்திக்கான ஸ்டெர்லைட் அலையை 4 மாதங்கள் மட்டும் அனுமதிக்கலாம், உள்ளூர் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து ஆலையின் செயல்பாடுகளைக் கண்காணிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனைவரும் ஏகமனதாக சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து 4 மாதங்களுக்கு மட்டும் ஆலையைத் திறக்க அரசு அனுமதித்துள்ளது. 4 மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக மின்சார இணைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...