அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கம் அறிவுறுத்தலின் பேரில் இளைஞர் அமைப்பு சார்பாக பேரூராட்சி செயலர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதிராம்பட்டினம் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஆலடிக்குளம்,செக்கடிக்குளம்,மனப்பங்குளம் அகியவற்றின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால் காசாரா ஏரியில் பம்பிங் லைன் மூலம் மேற்படி கூறிய குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கோரிக்கை வைத்தனர்.
இஜபா பள்ளிக்கும்,இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்திற்கு அருகில் இருக்கும் மழைநீர் வடிகாலில் குப்பைகள் சேர்ந்துள்ளது,வீட்டுக்கழிவு நீரும் கலந்துவிடுகிறது.இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.மேலும் பள்ளி மாணவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையும் உடனடியாக சரி செய்திட வேண்டும் என்று கோரிக்கை மனுவை அளித்தனர்.
இந்த சந்திப்பில் SISYA அமைப்பின் அனஸ், மரைக்கா இத்ரீஸ், சலீம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Your reaction