பட்டுக்கோட்டையில் நேற்று மஸ்ஜிதே இப்ராஹிம்(ரயிலடி பள்ளி) பள்ளிவாசலில் பட்டப்பகலில் அத்துமீறி தலையில் தொப்பியுடன் நுழைந்த மர்ம நபர் அங்கிருக்கும் அலமாறி உள்ளிட்டவற்றை சோதனையிடுகிறான்.
அதில் ஏதும் கிடைக்காததால் அங்கு மாட்டப்படிருக்கும் சட்டை பையில் இருந்த பணம், பைக் சாவி ஆகியவற்றை எடுத்து வெளியே வந்த அந்த மர்ம ஆசாமி பைக்கை எடுத்துக்கொண்டு பறந்துவிட்டான். இந்த காட்சி அங்கிருந்த CCTV காட்சியில் பதிவாகி உள்ளது.
திருடு போயுள்ள பைக்கில், பள்ளிவாசலின் சந்தா வசூல் புக் ஆகிய முக்கிய ஆவணங்கள் இருந்ததாக அப்பள்ளியின் பேஷ் இமாம் கூறியுள்ளார். எனவே இப்புகைப்படத்தில் உள்ள நபர் குறித்து தகவல் ஏதும் தெரிந்தால் பட்டுக்கோட்டை இரயிலடி பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டு கொள்ளப் படுகிறார்கள்.
Your reaction