சட்டசபை தேர்தலுக்கான இறுதி கட்ட பிரச்சாரம் நடைப்பெற்று இன்று மாலையுடன் ஓய்வடைந்தது. இதனால் இன்று காலை முதலே சுட்டெரிக்கும் வெயிலை கூட பொருட்படுத்தாமல் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டனர்.
அதன்படி அதிராம்பட்டினத்தில் திமுக, அமமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர். திமுகவின் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தனித்தனியே தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.
அதன்படி தமுமுக மாநில துணைச்செயலாளர் அஹமது ஹாஜா தலைமையில் வீதி வீதியாக சென்று திமுக கூட்டணி வேட்பாளர் கா. அண்ணாதுரைக்கு வாக்கு சேகரித்தனர். அப்போது நாசகார பாஜக அரசுக்கு மரண அடி கொடுக்க இம்முறை திமுகவுக்கு வாக்களிப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டனர். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில், தமுமுக இளைஞர் அணியினர் உள்ளிட்ட சார்பு அணியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

















Your reaction