தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் K.S. சரவண குமாருக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு இன்று தேனி துலுக்கப்பட்டி குள்ளப்புரம், மறுகால்ப்பட்டி ஜெயமங்களம் பகுதியில் பொது மக்கள் மற்றும் வணிகர்கள், பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகளிடம் வீடு வீடாக சென்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தினர் வாக்கு சேகரித்தனர்.
இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் நகர செயலாளர் முபாரக் அலி, ஹிதாயத்துல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இதில் தமுமுக மாவட்ட செயலாளர் ஹபிப் மற்றும் நிர்வாகிகள், முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் நூர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






Your reaction