கடந்த நான்கு மாதங்களாக தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில், தற்போது கொரோனா பரவும் நோய் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் ஆயிரத்து 1200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 168 மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மொத்த பாதிப்பு 183ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் உள்ள ஒரே நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் நாளை முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வாரத்திற்கு 6 நாட்கள் ஆன்லைன் வழியில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Your reaction