வீடு கட்டபோறீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க!!

3157 0


அதிரை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் ஏறக்குறைய 5 ஆயிரம் வீடுகள் உள்ளன. அதில் பெரும்பாலான வீடுகள் ஒரே மாதிரியான கட்டடக்கலையில் அமைக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்க முடியும். அதுவே அதிரைக்கான தனித்துவமாக இருக்கும். இருந்தபோதும் கட்டுமான நுணுக்கத்தில் மிக முக்கியமான ஒன்று அதில் விடுப்பட்டிருக்கிறது. அது தான் ரூஃப் பீம்.

ரூஃப் பீம் என்றால் என்ன?

லின்டல் பீமுக்கு மேல் செங்கல் கட்டுமானம் செய்யப்பட்டு அதன் மேல் நேரடியாக கான்கிரீட் மேற்கூரை போடுவது நமதூர் வழக்கம். ஆனால் வழக்கமான கட்டுவேலையோடு மேற்கூரைக்கு வலுசேர்க்கும் வகையில் பீம்மையும் இணைத்துக்கொள்வது ரூஃப் பீம் என அழைக்கப்படுகிறது. அதன்படி லின்டலுக்கு மேல் செங்கல் கட்டுவேலை செய்து 12 இன்ச் அல்லது 24 இன்ச் (இடத்திற்கு ஏற்ப) கான்கிரீட் பீமுடன் கான்கிரீட் மேற்கூரை அமைப்பதே ரூஃப் பீம் எனப்படும்.

ரூஃப் பீம் பயன் என்ன?

கட்டடத்தின் கான்கிரீட் மேற்கூரையின் அழுத்தத்தை தூண்களுக்கு சமமாக பிரித்து கொடுப்பதில் ரூஃப் பீமின் பங்கு மகத்தானது. இதன் மூலம் கட்டடம் சமமான நிலையிலேயே இருக்கும். அதேசமயம் எதிர்காலத்தில் கட்டடத்தின் புனரமைப்பு அல்லது மறுசீரமைப்பு பணிகளின்போது அந்த கட்டடத்தின் மேற்கூரை பாதிப்பு அடையாது.

நமது கனவு இல்லத்திற்கு வெளிப்புறத்தில் எந்த அளவுக்கு அழகு சேர்க்க முக்கியத்துவம் கொடுக்கின்றமோ அதைவிட ஒருபடி வீட்டின் ஆயுட்காலத்தை தீர்மானிக்கும் ரூஃப் பீமுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியமாகிறது. எனவே தான் இந்த ரூஃப் பீமுக்காக தனியாக கட்டணம் ஏதும் ஆமீனாஸ் கன்ட்ரக்சன் நிறுவனம் வசூலிப்பது இல்லை. இனி வரக்கூடிய காலங்களில் கட்டடத்துறை சம்மந்தமாக எளிய தமிழில் உங்களோடு பேசுகிறேன்.

Er. முகம்மது அபூபக்கர்,
ஆமீனாஸ் கன்ட்ரக்சன்,
அதிரை.
+91 8870717484.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: