பெட்ரோல், டீசலை GST வரிக்குள் கொண்டுவர வாய்ப்பே இல்லையா?” : நிதி அமைச்சரின் பதிலால் மக்கள் கலக்கம்!

657 0


மோடி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதலே மக்களை தெளிய விட்டு தெளிய விட்டு அடித்து வருகிறது. குறிப்பாக, பெட்ரோல், டீசல் போன்றவைகளின் விலையோடு, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளதால் மக்கள் பரிதவித்து நிற்கின்றனர்.

‘சர்வதேச சந்தையில் உள்ள விலை நிலவரங்களின் அடிப்படையில், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயித்துக் கொள்கின்றன. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக பெட்ரோல், டீசல் மீதான விலை தினந்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது.

அதற்கு மத்திய அரசு விதித்துள்ள கலால் வரியே காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. அதேவேளையில், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவரவேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டுவரப்படுமா என்று மக்களவையில் நேற்று எதிர்கட்சி எம்.பிக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்தக் கேள்விக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “இப்போதுள்ள நிலையில் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், இயற்கை எரிவாயு, சமையல் சிலிண்டர் ஆகியவற்றை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டுவரும் திட்டம் ஏதும் இல்லை.

இந்த பொருட்களை எந்த தேதியில் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது என்று மாநிலங்களும் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் சிபாரிசு செய்ய வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இதுவரை, ஜி.எஸ்.டி. கவுன்சில் அப்படி ஒரு சிபாரிசை செய்யவில்லை.

மேலும், இப்போதுவரை ஜி.எஸ்.டி கவுன்சில், பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டுவரும் தேதி குறித்து ஏதும் பரிந்துரை செய்யவில்லை. மேலும் வருவாயில் ஏற்படும் பாதிப்பு உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் ஆராய்ந்து, ஜி.எஸ்.டி கவுன்சில் இதுகுறித்து ஒரு முடிவு எடுக்கலாம். அப்படி கொண்டு வந்தால், நாடு முழுவதும் எரிபொருட்கள் மீது ஒரே மாதிரியான வரி விதிப்பு சாத்தியமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: