தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் காயிதே மில்லத் நகர்,காசிம் அப்பா தெரு போன்ற பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக வீடுகளிலும்,சாலைகளிலும் தண்ணீர் தேங்கி அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இந்த பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்வதில் சரபேந்திர்ராஜன்பட்டிணம்,ஆண்டிக்காடு இரண்டு ஊராட்சிகளுக்கும் போட்டி நிலவுகிறது.இதனால் கடுமையான சொல்ல முடியாத துயரத்திற்குள்ளாகுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர் பாட்ஷா மற்றும் அப்பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள்,SDPI கட்சியினர் மூலம் மழைநீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் போர்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளை நியமித்து அப்பகுதி மக்களுக்கு உடனடி தேவைகளை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.
Your reaction