அதிரையில் 64மிமீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!
அதிராம்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
கடந்த 24மணி நேரத்தில் இன்றுகாலை 8:30மணி நிலவரப்படி 18.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் இன்று காலை முதல் கூடுதலாக சற்று முன்னர் வரை உள்ள நிலவரப்படி 64மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலடுக்கு சுழற்சி காரணமாக இம்மழை பெய்வதால் இன்னும் ஓரிரு நாட்கள் இம்மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறன.
Your reaction