கோயிலுக்கு வந்த 50 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை – உ.பி-யில் தொடரும் கொடூரம் !

788 0


உத்தர பிரதேசத்தில் தினந்தோறும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருவது அம்மாநில மக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்கு வந்த 50 வயதுப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மேற்குப் பகுதியிலுள்ள பதாயூ நகரின் மேவ்லி கிராமத்தில் பழமையான சிவன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலுக்கு 50 வயதான பெண் ஒருவர் கடந்த ஞாயிறு மாலை 4 மணிக்குச் சென்றுள்ளார். இரவு 7 மணி வரை வீடு அம்மா வீடு திரும்பவில்லை என்ற அச்சத்தோடு மகன், தாயின் கைப்பேசிக்கு அழைத்தபோது அது அணைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அந்த பெண்ணை, இரவு 11 மணிக்கு அப்பெண்ணின் வீட்டிற்குக் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றும் சாது சத்யநாராயணா மற்றும் அவரத் உதவியாளர்களான வேத்ராம் மற்றும் ஜஸ்பால் ஆகியோர் கோயிலுக்கு வந்த பெண், அருகிலிருந்த நீர் வற்றிய கிணற்றில் விழுந்து காயமானதால், சாதுவின் நான்கு சக்கர வாகனத்தில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து அவரது கணவரும், மகனும் சேர்ந்து மருத்துவமனைக்கு சென்று அந்தபெண் உடலில் ரத்த காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். சிகிச்சைப் பெற்று வந்த சிறிது நேரத்திலேயே அந்தபெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அந்த பெண்ணின் மகன் தனது தாயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த புகாரை காவல் ஆய்வாளர் பதிவு செய்ய மறுத்துள்ளார். இதனையடுத்து உயிரிழந்த பெண்ணை பிரேத பரிசோதனை செய்த போது அப்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து போலிஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்தப் புகாரைப் பதிவு செய்ய மறுத்த ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தாம் கைது செய்யப்பட்டு விடுவோம் என அச்சத்தில் கோயில் பூசாரி சாது சத்யநாராயணா உள்ளிட்ட மூவரும் தப்ப முயன்றனர். எனினும், சகாக்கள் இருவரும் கைது செய்யப்பட்டுவிட, சாது மட்டும் தலைமறைவாகி விட்டார்.

மேலும் சம்பவ இடத்தில் போலிஸார் நடத்திய விசாரணையில், அப்பெண்ணின் ரத்தக்கறை படிந்த சேலை கோயிலுக்கு அருகில் கிடந்துள்ளது. சாது சத்யநாராயணாவின் ஆசிரம அறையின் கட்டிலிலும் ரத்தக் கறைகள் கண்டறியப்பட்டுள்ளன.

டெல்லியில் நிர்பயா 2013-ல் பாதிக்கப்பட்டதுபோல், உ.பி. பெண்ணின் உடலில் பல்வேறு பாகங்களில் இரும்புக் கம்பியைப் பயன்படுத்தி கொடூரமான காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். இது உடற்கூறு ஆய்வில் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான கோயில் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்துத் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் சந்திரமுகி தேவி, சம்பவ இடத்தையும் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உ.பி.யில் 50 வயதுப் பெண்ணை கூட்டுப் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்த வழக்கில், “இரவில் பெண்கள் வெளியே செல்லாமல் இருந்தால், இது போன்ற குற்றங்கள் நடக்காது” என்று தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் சந்திரமுகி தேவி சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியதைப் தொடர்ந்து அந்த கருத்தை திரும்பப் பெறுவதாகக் கூறியுள்ளார்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: