கேரளா உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கூட்டணி அமோக வெற்றி – பாஜகவுக்கு படுதோல்வி !

655 0


கேரளாவில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 244 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முன்னிலை மற்றும் வெற்றி நிலவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

மாலை 4 மணி நிலவரப்படி :

6 மாநகராட்சிகளில் ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி 4 இடங்கள்; காங்கிரஸ் கூட்டணி 2 இடங்கள்
86 நகராட்சிகளில் இடதுசாரி கூட்டணி 35 இடங்கள், காங்கிரஸ் கூட்டணி 45 இடங்கள்; பாஜக கூட்டணி 2 இடங்கள்

14 மாவட்ட ஊராட்சிகளில் இடதுசாரி கூட்டணி 11 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன

152 ஊராட்சி ஒன்றியங்களில் இடதுசாரி கூட்டணி 112 இடங்கள்; காங்கிரஸ் கூட்டணி 40 இடங்கள்

941 ஊராட்சிகளில் இடதுசாரி கூட்டணி 517 இடங்கள்; காங்கிரஸ் கூட்டணி 374 இடங்கள்; பாஜக 22 இடங்கள்

இவ்வாறாக வாக்கு எண்ணிக்கை நிலவரம் இருந்து வருகிறது. இதன்மூலம் கேரளா உள்ளாட்சி தேர்தலில் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றியை பெற இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் – முஸ்லீம் லீக் கூட்டணி அங்கு இரண்டாம் இடத்தை பிடித்துள்ள நிலையில், பாஜகவுக்கு அங்கு படுதோல்வி பரிசாக கிடைத்துள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்து வகையான உள்ளாட்சிகளில் இடதுசாரிகள் தலைமையிலான கூட்டணி அமோக முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது இடம் காங்கிரசுக்கு. கடைசி இடம்தான் பாஜகவுக்கு கிடைத்துள்ளது. பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் கும்மனம் ராஜசேகரன் ஆகியோர் மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து, தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.

கேரளாவில் சபரிமலை விவகாரம், தங்ககடத்தல் விவகாரம் உள்ளிட்டவற்றை வைத்து முதல்வர் பினராயி விஜயனை கடும் விமர்சனம் செய்து பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்த நிலையில், அம்மாநில மக்கள் அதற்கு சிறிதும் மதிப்பளிக்கவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டிகிறது என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கேரளா எப்போதுமே பாஜகவுக்கு இடமளிக்காத மண் என்பது இந்த தேர்தல் முடிவுகள் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: