குற்றால அருவிகளில் நாளை முதல் குளிக்க அனுமதி !

1112 0


பருவமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பல மாதங்களாக தடை விதிக்கப்பட்டிருந்த குற்றால அருவிகளில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொது மக்களை மட்டுமல்லாது அங்குள்ள சிறு வியாபாரிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை சீசன் காலமாகும். தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்பரிக்கும்.

அங்கு நிலவும் இதமான சாரல், குளு குளு காற்றை அனுபவிக்க ஏராளமானோர் குற்றாலத்திற்கு படையெடுத்து வருவார்கள். உலகில் அனைத்து வகை சரும நோய்களை தீர்க்கும் மூலிகைகள் நிறைந்து காணப்படும் மேற்குத்தொடர்ச்சி மலை தமிழகத்தில் உள்ள குற்றாலத்தில் நிறைந்து காணப்படுகிறது.

தீராத நோய்களை தீர்க்கும் இந்த வனம் அனைத்தும் மூலிகைகள் நிறம்ப பெற்றபகுதியாகும். இங்குள்ள அருவிநீர் மூலிகைகளில் பட்டு தெறித்து அருவியாக கொட்டுவதால் இங்கு குளிக்க ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் பல்லாயிரக்கணக்கானோர் குற்றாலத்திற்கு வந்து குளித்து செல்வது வழக்கம்.

ஜூன் முதல் செப்டம்பர் வரை, தென் மேற்கு பருவமழையால் அருவிகளில் தண்ணீர், மிதமான வெப்பநிலை, குளிர் காற்று என குற்றாலம் அருவி களைகட்ட தொடங்கிவிடும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு பருவமழையால் கடும் பனி மற்றும் சில நேரங்களில் கன மழை என சுற்றுசூழல் மாறி நீர் வீழ்ச்சிகளில் வெள்ளம் கொட்டும்.
இந்த ஆண்டு சீசன் காலத்தில் குற்றாலம் தண்ணீர் அருவிகளில் வெள்ளமாய் பெருக்கெடுத்தது ஆர்ப்பரித்து கொட்டியது என்றாலும் அதை தூரத்தில் நின்று ரசிக்க மட்டுமே முடிந்தது. காரணம், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஒவ்வொரு தளர்வுகளாக அறிவிக்கப்பட்டது என்றாலும் அருவிகளில் நீராட தடை இருந்தது. ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இன்று முதல் மெரினா கடற்கரை உள்பட அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் பொதுமக்களுக்கு அனுமதி உண்டு என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் நாளை முதல் குளிக்க அனுமதிக்கப்படும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பல மாதங்களாக குளிக்க அனுமதிக்கப்படாமல் இருந்த குற்றால அருவிகளில் நாளை முதல் குளிக்க அனுமதி உண்டு என்ற அறிவிப்பு பொதுமக்களையும் சுற்றுலா பயணிகளையும் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

கடந்த சில வாரங்களாக பருவமழை பெய்து வந்ததன் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் பெருகி வருகிறது. இந்தநிலையில் குற்றாலத்திற்கு செல்ல தற்போது அனுமதி கிடைத்துள்ளதை அடுத்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் அங்கு வரத் தொடங்குவார்கள். கடை வைத்துள்ள சிறு வியாபாரிகளும் இந்த அறிவிப்பை கேட்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: