30 ஆண்டுகளாக நச்சுத்தன்மை கொண்ட பாம்புகளின் விஷத்தை உடலில் ஏற்றிவரும் நபர்!! (வீடியோ இணைப்பு)

2590 0


கலிபோர்னியாவை சேர்ந்த ஸ்டீவ் லுட்வின் (51) என்பவர் மலிவான, பாதுகாப்பான விஷ முறிவு மருந்தினை தயாரிப்பதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பாம்பின் விஷத்தை தனது உடலில் செலுத்தி வருகிறார்.

இதற்கு உலகின் நச்சுத்தன்மை வாய்ந்த பாம்புகளின் விஷம் அவருக்கு தேவைப்படுகிறது, பாம்பிடம் இருந்து விஷத்தை எடுத்து, பின்னர் அதனை தனது உடலில் ஏற்றிக்கொள்கிறார்.

போப் புல்விரியன் என்ற வகை பாம்பிடம் விஷம் எடுப்பது போன்றுதான் பிற பாம்புகளிடம் இருந்தும் விஷம் எடுக்கிறார்.

இதுகுறித்து ஸ்டீவ் கூறியதாவது, ஒரு முறை பிரித்தானியாவில் தீவிர சிகிச்சை பிரிவில் 3 நாட்கள் இருக்க வேண்டியதாயிற்று, நான் சாகப்போவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வீடியோ இணைப்பு:

அல்லது, வீங்கி கறுப்பாகும் என் கையை வெட்டிவிடப்போவதாகவும் மருத்துவர்கள் கூறினர். இவ்வாறு பாம்பு விஷத்தால் பல்வேறு ஆபத்துகளை சந்தித்துள்ளேன். இது மிகவும் ஆபத்தானது என்றாலும் தவறுகளில் இருந்து அதிகம் கற்றுக்கொண்டேன்.

இப்போது, என்னிடம் நல்ல தொழிலநுட்பம் உள்ளது. நான் பல ஆண்டுகளாக நோய்வாய்ப்படவில்லை என்பதை கவனிக்கிறேன். எனக்கு கடந்த 15 ஆண்டுகளாக சளி அல்லது காய்ச்சலோ வரவில்லை என கூறியுள்ளார்.

மலிவான, பாதுகாப்பான விஷ முறிவு மருந்தினை உருவாக்க விரும்பும் அவருடைய ரத்தத்திலுள்ள நோய் எதிர்ப்பு கூறுகளை கோப்பன்ஹேசன் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: