அதிராம்பட்டினம் அருகே உள்ளது ஏரிப்புறக்கரை ஊராட்சி இந்த ஊராட்சி மன்றத்திற்கான கட்டிடம் கடந்த 1990ஆம் ஆண்டு கட்டி பயன்பாட்டிற்கு வந்தன.

அப்பொழுதிலிருந்தே இக்கட்டிடத்தில் ஊராட்சி பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்தது,
இந்த நிலையில் மிகவும் பழமையான அக்கட்டிடம் சிதிலமடைந்து எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன.
இதன் காரணமாக அதனருகிலேயே புதிய கட்டிடம் ஒன்று கட்டி 90% பணிகள் முடிவடைந்தும் இன்னும் பயன்பாடிற்கு வரவில்லை.
இதன் காரணமாக அங்கு பணி புரியும் அதிகாரிகள், பொதுமக்கள், அக்கட்டிடத்தில் பணியாற்ற அச்சபடுகிறார்கள். எனவே அச்சத்தை போக்கும் வகையில், புதிய கட்டிடத்தை திறக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிலால் நகர் 1வது வார்டு கவுன்சிலர் ஜாஸ்மின் கமால் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Your reaction